'டீன்ஸ்' படத்திற்கு கூட்டமே இல்லை.. நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவதும் இல்லை.. பார்த்திபன்

  • IndiaGlitz, [Monday,July 15 2024]

பார்த்திபன் இயக்கி நடித்த 'டீன்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்து வருகிறது என்பதும் படத்தின் வசூலும் திருப்திகரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

முதல் நாளில் ’இந்தியன் 2’ திரைப்படம் வெளியானதால் அந்த படம் குறித்த பரபரப்பான பேச்சு மட்டுமே இருந்த நிலையில் இரண்டாவது நாளிலிருந்து 'டீன்ஸ்’ படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் ஊடகங்களில் வைரலாக தொடங்கியது. மேலும் இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் பாசிட்டிவாக இருந்ததை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த படத்திற்கு ஆடியன்ஸ் வருகை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'டீன்ஸ்’ படத்தின் வரவேற்புக்கு நெகிழ்ச்சி அடைந்த பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்! என் கண்ணீர் மழைத்துளி போலத் தூய்மையானது! நேற்று 'டீன்ஸ்’ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது.வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை. எத்தனை ஸ்க்ரீன்ஸ்? எவ்வளவு வசூல்? இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை. போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.

கோடிகளை என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை. பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப்படுத்துகிறது. தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி’ என உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார்.

More News

எங்கே விட்டோமோ அங்கே இருந்துதான் ஆரம்பிப்போம்.. வெங்கட் பிரபு வெளியிட்ட சவால்.. வீடியோ வைரல்..!

இயக்குனர் வெங்கட் பிரபு சற்று முன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு 'எங்கே விட்டோமோ அங்கிருந்துதான் ஆரம்பிப்போம்' என்று கூறி ரசிகர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்துடன் என்னுடைய சிஎஸ்கே கட்சி கூட்டணி வைக்கும்.. காமெடி நடிகர் பேட்டி..!

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் என்னுடைய சிஎஸ்கே கட்சி கூட்டணி வைத்து 2026 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் என காமெடி நடிகர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 27 வருடங்களுக்கு பின்  இணைந்த  சரத்குமார் - தேவயானி.. மீண்டும் ஒரு சூர்யவம்சம்?

சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து நடித்த 'சூரிய வம்சம்' என்ற திரைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 27 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரே படத்தில் இருவரும்

போரியா.. இல்லை செருப்பால அடிக்கட்டுமா? அம்மு அபிராமியின் 'ஜமா' டீசர்..!

குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அம்மு அபிராமி முக்கிய வேடத்தில் நடித்த 'ஜமா' என்ற திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின்

தனுஷின் 'ராயன்' டிரைலர் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடித்த இயக்கிய 'ராயன்' திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது என்பது குறித்து