'இரவின் நிழல்' முதல் நான்லீனியர் படம் இல்லையா? புளுசட்டை மாறனுக்கு பார்த்திபன் பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பார்த்திபன் நடித்த 'இரவின் நிழல்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் 'இரவின் நிழல்’ திரைப்படம் உலகின் முதல் நான்லீனியர் திரைப்படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் அவரது கருத்தை ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்
'இரவின் நிழல்’ முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை என்றும் 'Fish and Cat' என்ற ஈரானிய திரைப்படம் தான் உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ, சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக, நண்பர் blue sattai மாறன் அவர்களின் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
அதுசரி! எதுசரி என விளங்க!..Google-ல் அவர் சொல்லும் படம் non-linear என்ற வரிசையில் இல்லை. இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை the worlds first non-linear shot movie என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம்.
15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் spl show பார்க்க அழைத்தேன். அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம் (அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே! என பார்த்திபன் பதிலடி கொடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments