அரசியல் கட்சியில் சேர ரூ.100 கோடி: பார்த்திபன் கூறும் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

ஒரு பிரபல அரசியல் கட்சி ஒன்று அந்த கட்சியில் சேர தன்னிடம் ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாகவும், ஆனால் அந்த கட்சியில் சேர மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசியிருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கமல்ஹாசனை போல் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கும் ஒரு அரசியல் கட்சி ரூ.100 கோடி கொடுத்து அவரை வளைத்த போட முயன்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஈரோடில் நடந்த புத்தக திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் இந்த தகவலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

More News

சில்க் ஸ்மிதாவின் வெப்சீரியலை தயாரிக்கும் ரஜினி பட இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கி இயக்குனர் ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் ஒரு இந்தி படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில்

சூர்யா 37: அல்லு சிரிஷூகு பதில் ஒப்பந்தமான பிரபல நடிகர்

நடிகர் சூர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

படப்பிடிப்பின்போது அமலாபால் காயம்: படப்பிடிப்பு ரத்து

நயன்தாரா, த்ரிஷா போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிகை அமலாபால் 'அதோ அந்த பறவை போல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமலாபாலுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு.

விஜய்யை அடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்

கருணாநிதியின் மறைவின்போது அமெரிக்காவில் 'சர்கார்' படப்பிடிப்பில் இருந்த தளபதி விஜய், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் இருந்து நேராக கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.