அரசியல் கட்சியில் சேர ரூ.100 கோடி: பார்த்திபன் கூறும் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

ஒரு பிரபல அரசியல் கட்சி ஒன்று அந்த கட்சியில் சேர தன்னிடம் ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாகவும், ஆனால் அந்த கட்சியில் சேர மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசியிருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கமல்ஹாசனை போல் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கும் ஒரு அரசியல் கட்சி ரூ.100 கோடி கொடுத்து அவரை வளைத்த போட முயன்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஈரோடில் நடந்த புத்தக திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் இந்த தகவலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன் என்று கூறியுள்ளார்.