ரஜினி, கமலுக்கு போட்டியாக விரும்பவில்லை: பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
குடியுரிமை திருத்த சட்டத்தில் வெறுமனே பேசிப்பேசி வன்முறை ஆக்காமல் அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்
கோவையில் பார்த்திபன் எழுதிய ’கிறுக்கல்கள்’ மற்றும் ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
போராட்டம் இல்லாமல் எந்த சித்தாந்தமும் வெற்றி பெற்றதில்லை. ஒவ்வொரு சராசரி பிரஜையும் அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் அரசியல் மீது மிகுந்த ஈடுபாடு இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒன்று
என்னை பொருத்தவரை நான் தேர்ந்தெடுத்த தொழில் சினிமா என்பதால் எனக்கு சினிமாவை தாண்டி ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன் சினிமாவில் தன்னிறைவு அடைய வேண்டும். அதன்பின்னர் தான் நான் அரசியலில் நான் செல்ல முடியும். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களே இப்பொழுதுதான் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களே அரசியலுக்கு வந்துவிட்டு ஒரு போராட்டத்தில் உள்ளனர். நடுவில் நான் அவர்கள் இருவருக்கும் போட்டியாக விரும்பவில்லை. அதனால் இன்னும் கொஞ்ச நாள் சினிமாவில் சாதித்துவிட்டு அதன் பின்னர் நான் அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறேன்
ரஜினிகாந்த் அவர்கள் எதோடு சார்ந்து இருக்கிறார் என்பது இப்போது பிரச்சனை இல்லை. அவர் கூறும் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பதால் தான் அந்த கருத்து அதிகமாக பரவி வருகிறது. அவரது கருத்தை நாம் ஒதுக்கி வைத்து விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. போராட்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது, எந்த வெற்றியும் கிடைக்காது. ஆனால் அவருடைய கருத்து வேறுவிதமாக இருக்கிறது எனவே ரஜினியின் இந்த கருத்தை நாம் பெரிதுபடுத்தாமல் இருந்தாலே போதும் என்று பார்த்திபன் கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout