ஒரே மாதத்தில் பதவியில் இருந்து விலகிய பார்த்திபன்: தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மாதம் 25ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் கூடியபோது தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவராக இருந்த கவுதம் மேனன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் புதிய துணைத்தலைவராக நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய துணை தலைவராக பதவியேற்று சுமார் ஒருமாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இன்று திடீரென தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் அறிவித்து அதற்கான ராஜினாமா கடிதத்தையும் அளித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நாளை இளையராஜா-75 நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்க பதவியில் பார்த்திபன் விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயம் பாதிக்கப்படும் போது
— R.Parthiban (@rparthiepan) February 1, 2019
சோறு மூன்றாம் பட்சமே!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout