அமெரிக்காவை கூட காப்பாற்றிவிடலாம், ஆனால் இந்தியாவை... பார்த்திபன்!

  • IndiaGlitz, [Friday,April 17 2020]

தமிழகம் உள்பட இந்தியாவில் மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் ஒருசில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் மே 3ஆம் தேதிக்கு பின் ஒருசில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடம் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் விடுத்த வேண்டுகோள் பின்வருமாறு:

ஊரடங்கை தளர்த்த வேண்டாம். மக்கள் மே 3 வரை மனரீதியாக எதிர்கொள்ள தயாராகி விட்டார்கள், இப்படியே இருக்கட்டும். வேண்டுமானால் மிக அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் சில விஷயங்களை கையில் எடுங்கள். ஐடி போன்ற நிறுவனங்களுக்கு தளர்த்த வேண்டாம். 50 பேர் வேலைக்கு செல்கிறார்களா? 500 பேர் வேலைக்கு செல்கிறார்களா? என்று எப்படி தெரியும்

இன்னும் நாம் 3ம் கட்டத்திற்கு செல்லவில்லை. அப்படி நாம் சென்றால், அமெரிக்காவை கூட காப்பாற்றி விடலாம் இந்தியாவை காப்பாற்றவே முடியாது என அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறியதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

More News

சாலைகளில் உறங்கும் சிங்கங்கள்!!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளில் கூட தற்போது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனா நேரத்தில் நம்பிக்கை அளிக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனாவிற்கு அதிகளவு நிவாரண நிதியை அள்ளிக்கொடுக்கும் நாடுகள்!!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகநாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றிருக்கிறது

திருப்பூர் கேரம்போர்டை அடுத்து சேலத்தில் நடந்த ட்ரோன் காமெடி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை ஒரு சிலர் மதிக்காமல் வெளியில் சென்று விளையாடிக்கொண்டு இருப்பதை போலீசார் ட்ரோன்

உங்கள் காதலி உங்களுக்காக காத்திருக்கிறாள்: வெளிநாட்டு தமிழர்களுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.