'நேர் கொண்ட பார்வை'யும், 'நேரு கொண்ட பார்வை'யும்: பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பக்கம் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்னொரு பக்கம் காஷ்மீர் மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியை மீறப்பட்டு அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தி இயக்குனர் நடிகர் பார்த்திபன் தனது பாணியில் ஒரு கவிதை எழுதி அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்தக் கவிதை பின்வருமாறு:
நேரு கொண்டப் பார்வை
காங்கிரஸ் கொண்டப் பார்வை
Bjp கொண்டப் பார்வை
காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை
பார்வைகளின் கோணங்கள் நேர் மாறாக
'நேர் கொண்டப் பார்வை'
பெண்களுக்கான நியாயத்திற்காக.
ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்' என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். அஜித் படத்தின் ரிலீசையும், காஷ்மீர் பிரச்சனையும் ஒரே கவிதையில் புத்திசாலித்தனமாக இணைத்த பார்த்திபனுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்
நேரு கொண்டப் பார்வை
— R.Parthiban (@rparthiepan) August 7, 2019
காங்கிரஸ் கொண்டப் பார்வை
Bjp கொண்டப் பார்வை
காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-பார்வைகளின் கோணங்கள் நேர் மாறாக
'நேர் கொண்டப் பார்வை' பெண்களுக்கான நியாயத்திற்காக.ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்! pic.twitter.com/KXJbWZsvUv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout