'நேர் கொண்ட பார்வை'யும், 'நேரு கொண்ட பார்வை'யும்: பார்த்திபன்

ஒரு பக்கம் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்னொரு பக்கம் காஷ்மீர் மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியை மீறப்பட்டு அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தி இயக்குனர் நடிகர் பார்த்திபன் தனது பாணியில் ஒரு கவிதை எழுதி அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்தக் கவிதை பின்வருமாறு:

நேரு கொண்டப் பார்வை
காங்கிரஸ் கொண்டப் பார்வை
Bjp கொண்டப் பார்வை
காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை
பார்வைகளின் கோணங்கள் நேர் மாறாக
'நேர் கொண்டப் பார்வை'
பெண்களுக்கான நியாயத்திற்காக.

ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்' என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். அஜித் படத்தின் ரிலீசையும், காஷ்மீர் பிரச்சனையும் ஒரே கவிதையில் புத்திசாலித்தனமாக இணைத்த பார்த்திபனுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

More News

'ஐ லவ் யூ' சொன்ன அபிராமி: முகினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்

பிக்பாஸ் வீடு என்பது ரியாலிட்டி ஷோ நடைபெறும் வீடா? அல்லது காதலர்கள் குடியிருக்கும் வசந்த மாளிகையா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இந்த சீசன் ஆரம்பமானதில் இருந்து

தமன்னாவிற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் செய்யும் உதவி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடிப்பில் இந்த ஆண்டில் ஏற்கனவே 'கண்ணே கலைமானே' மற்றும் 'தேவி 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தடுக்கி விழுந்த கவின், மயங்கி விழுந்த சேரன்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் ஐந்து குழுக்களாக பிரிந்து ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் மதுமிதா-அபிராமி, சாக்சி-லாஸ்லியா, கவின் - சேரன், சாண்டி-தர்ஷன், முகின் - ஷெரின் என ஐந்து ஜோடிகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது

பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவின் இரங்கல் செய்தி!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளருமான ராஜலட்சுமி  பார்த்தசாரதி அவர்கள் இன்று தனது 93வது வயதில் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

காஷ்மீர் பிரச்சனையில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் வீரர்கள்

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்ட விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.