கண்டறிந்து காயடிக்க வேண்டும்: 17 மனிதமிருகங்கள் குறித்து இயக்குனர் பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 11 வயது சிறுமியை 22 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூர சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஒரு மாற்றுத்திறனாளி என்ற அனுதாபம் கூட இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்த மனித வடிவ மிருகங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது கோபத்தை 'அறுத்தெறியுங்கள்' என்ற தலைப்பில் கவிதை வடிவில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது
இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன் கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது …
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர், ஈக்களாய் மொய்த்துக் கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே
நம் கண்களையும் காதுகளையும்
கூர்மையாக்கி, ___- க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com