பார்த்திபன் அடுத்த படத்தின் டைட்டில் வீடியோ.. வழக்கம்போல் வித்தியாசமான தலைப்பு..!

  • IndiaGlitz, [Friday,January 19 2024]

பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ திரைப்படத்தை அடுத்து புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அந்த படத்தின் சில தகவல்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.

குறிப்பாக இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார் என்பதும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா கோஷல், தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் பாடல்களை பாடியதாகவும் அவ்வப்போது அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ’FIRST INTERESTING REPORT’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு சுருக்கமாக ’FIR’ என்று அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை அதாவது ஜனவரி 20ஆம் தேதி விடியன் நாதஸ்வரன் வெளியிடுவார் என்றும் பார்த்திபன் அறிவித்துள்ளார். ’குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை குழந்தை பருவத்தில் இருந்து இசையின் விசையை அசைத்து பார்க்கும் விடியன் நாதஸ்வரம் வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பல வருடங்களாக கிடப்பில் இருந்த கௌதம் மேனன் படம்.. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பல வருடங்களாக கிடப்பில் இருந்த கௌதம் மேனனின் திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தேதி  விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

ஜெயிக்கிறது என்னிக்குமே என் சொக்கன் தான்: சூரியின் 'கருடன்' டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..!

சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகி

'லெஜெண்ட் சரவணன்' நடிக்கும் அடுத்த படம்: அவரே கொடுத்த சூப்பர் அப்டேட்..!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடித்த 'லெஜெண்ட் ' என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை அவரே தெரிவித்துள்ளார்.

'அயலான்' சிவகார்த்திகேயனை பாராட்டாமல் சூர்யா பாராட்டியது யாரை தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் சமீபத்தில் பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் பல திரை உலக பிரபலங்களும்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்திட துணை நிற்போம்: திமுக எம்.எல்.ஏ பணிப்பெண் குறித்து பா ரஞ்சித்..!

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்போம் என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.