சென்ற படத்தில் ரகுமானுடன், இந்த படத்திலும் ஒரு மானுடன்: அடுத்த பட இசையமைப்பாளர் குறித்து பார்த்திபன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
'இரவின் நிழல்’ என்ற திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்த நிலையில், பார்த்திபன் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
வா’வென
வாய் பிளந்து
வரவேற்று
வாய் நனைய முத்தமிட்டு
இறுதிவரை இருக்க விரும்பி
இறுக அணைத்தாலும்…
திட்டமிட்டபடி
சட்டென விட்டு
வி ல கி
சென்றுவிடும்
சென்ற வினாடிகள் !!!
தும்பைப் பூவின் மீது
தூய்மையான
பனித்துளி படர்ந்து
தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட
மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும்
பூப்பதுமுண்டு!
இசையை விட தூய்மையானது எது?
சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான்
வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்.
இம்மான் …. இமான்!
அபார ஞானமும்
அயராத உழைப்புமாய்
அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார்.இன்னும் இரண்டு கர்ப்பத்தில்.
மைனா’வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை.அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.
இனி…
இனிமை
இசையாய்…
Ok!
Tittle ?
அறிவிப்போம் விரைவில்!
என்று பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் பார்த்திபனுடன் இணைந்து பணியாற்றுவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும், அவருடைய படத்திற்கு 5 பாடல்கள் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், பார்த்திபனின் பாடல் வரிகளுக்கு மெட்டமைத்தது புதிய அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பார்த்திபன் தான் இந்த படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வா’வென
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 24, 2023
வாய் பிளந்து
வரவேற்று
வாய் நனைய முத்தமிட்டு
இறுதிவரை இருக்க விரும்பி
இறுக அணைத்தாலும்…
திட்டமிட்டபடி
சட்டென விட்டு
வி ல கி
சென்றுவிடும்
சென்ற வினாடிகள் !!!
தும்பைப் பூவின் மீது
தூய்மையான
பனித்துளி படர்ந்து
தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட
மெலோடியாய்… pic.twitter.com/HMxUHClRZ9
Glad to unite musically with you @rparthiepan dear sir!
— D.IMMAN (@immancomposer) October 24, 2023
It’s indeed an amazing experience scoring five songs n bgm under your direction! Cherry on the cake is working on songs to your captivating lyrics!
Praise God! https://t.co/GgX11OBBdy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments