close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'துக்ளக்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

Thursday, August 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'துக்ளக் தர்பார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது பார்த்திபன் இணைந்துள்ளார். விஜய்சேதுபதியுடன் பார்த்திபன் இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் ஏற்கனவே சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது பார்த்திபன் இந்த படத்தில் இணைந்தது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று கூறப்படுகிறது

விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் படமான 'துக்ளக் தர்பார்' படத்தை அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாள் இயக்கி வருகிறார். இவர் 'சில்லுன்னு ஒரு காதல்' இயக்குனர் கிருஷ்ணா, பாலாஜி தரணீதரன், பிரேம்குமார் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.'96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு இயக்குனர் பாலாஜி தரணிதரன் காரசாரமான அரசியல் நையாண்டி வசனங்களை எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment