'நான் செத்ததில் இருந்தே இங்கதான் இருக்கிறேன்': பார்த்திபனின் பேய்ப்படம் 'டீன்ஸ்' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டீன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ஒரு பள்ளியில் படிக்கும் நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் ஒரு குழுவாக காட்டுக்குள் செல்கின்றனர். அந்த காட்டில் நடக்கும் சில மர்மமான விஷயங்கள், பேய்கள் நடமாட்டம் ஆகியவற்றை பார்த்து பயந்த அவர்கள் எப்படி அங்கிருந்து வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
காட்டில் சிக்கிய மாணவ மாணவிகளின் நிலை என்ன என்பதை திரில் மற்றும் சஸ்பென்ஸ் உடன் பார்த்திபன் வழங்கியுள்ள படம் தான் ‘டீன்ஸ்’. பொதுவாக பேய் படம் என்றாலே பழிவாங்கல் படமாகவும் கடந்த சில ஆண்டுகளாக காமெடி படமாகவும் மாறியுள்ள நிலையில் உண்மையாகவே ஒரு பயத்தை வரவழைக்கும் பேய் படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு நிச்சயம் பாராட்டுக்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வித்தியாசமான பேய் படத்தை எடுத்துள்ள பார்த்திபன் இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை வணக்கம்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 6, 2024
மாலை = மணிசார்க்கு
வணக்கம் = உங்களுக்கு...https://t.co/63UWRQv3Z4@MadrasTalkies_ @rparthiepan@immancomposer@dopgavemic@k33rthana@GenauRanjith@lramachandran@AdithyarkM@Iam_Nithyashree@shreyaghoshal@Arivubeing@iYogiBabu@onlynikil@shrutihaasan… pic.twitter.com/luSBgk9KLr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments