'டீன்ஸ்' ரன்னிங் டைம்.. இன்னும் 4 விநாடிகள் குறைந்திருந்தால் சாதனையா இருந்திருக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பார்த்திபன் நடித்து இயக்கிய ’டீன்ஸ்’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் ரன்னிங் டைமை பார்த்த ரசிகர் ஒருவர் இன்னும் நான்கு வினாடி ரன்னிங் டைம் குறைந்து இருந்தால் இந்த படம் ஒரு சாதனையை செய்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பார்த்திபன் நடித்த இயக்கிய ’டீன்ஸ்’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக டிக்கெட் கட்டணத்தை குறைத்துள்ளதாக பார்த்திபன் அறிவித்து இருந்தார் என்பதும் இதனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தை குழந்தைகளுடன் குடும்பத்தோடு பார்ப்பதில் எந்த விதமான சிக்கலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 127 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 127 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் என்று இருந்திருந்தால், இந்த படத்தின் ரிலீஸ் தேதியான 12/7 /24 என்ற தேதியும் ரன்னிங் டைம் நேரமும் ஒரே மாதிரியாக இருந்து சாதனை செய்திருக்கும் என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இதனை அடுத்து பார்த்திபன் ’டீன்ஸ்’ படத்தின் ரன்னிங் டைமை 4 வினாடிகள் குறைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டி இமான் இசையமைப்பில் கேவ்ரிக் ஆரி ஒளிப்பதிவில், சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முற்றிலும் புது முகங்கள் நடித்துள்ளனர் என்பதும் இளைய தலைமுறையினர் ரசிக்கும் வகையில் ஒரு திகில் படத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார் என்று சமீபத்தில் வெளியான டீசரில் இருந்து தெரிகிறது.
Must watch on the 12th itself
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 8, 2024
TEENZ from July 12th in Cinemas Worldwide@rparthiepan@immancomposer@dopgavemic@k33rthana@GenauRanjith@lramachandran@AdithyarkM
@Iam_Nithyashree@shreyaghoshal@Arivubeing@iYogiBabu@onlynikil@j_prabaahar@shrutihaasan@CVelnambi… pic.twitter.com/RZOf3x6nkW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com