பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையை பெற்ற ’இரவின் நிழல்’ திரைப்படம் படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’இரவின் நிழல்’ திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இருப்பினும் சரியான ரிலீஸ் தேதியை அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதம் ஏற்கனவே ’யானை’ ’டி பிளாக்’ ‘தி லெஜண்ட்’ தி க்ரே மேன்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் ’இரவின் நிழலில்’ எந்த தேதியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#இரவின்நிழல்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 24, 2022
@arrahman @rparthiepan@iravin_nizhal @musiconDhwani@theVcreations @ArthurWisonA @varusarath5 @GenauRanjith @RVijaimurugan @k33rthana @raakiparthepan @wired__ @Brigidasaga22 @The90skrishna @iamrobosankar @onlynikil @divomovies @MirchiTamil983 pic.twitter.com/ooLsGbssVE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments