பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையை பெற்ற ’இரவின் நிழல்’ திரைப்படம் படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’இரவின் நிழல்’ திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இருப்பினும் சரியான ரிலீஸ் தேதியை அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதம் ஏற்கனவே ’யானை’ ’டி பிளாக்’ ‘தி லெஜண்ட்’ தி க்ரே மேன்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் ’இரவின் நிழலில்’ எந்த தேதியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ்-ஐஸ்வர்யா ரகசிய சந்திப்பா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இருவரும் ரகசியமாக சந்தித்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன் போட்டோ எடுக்கும்போது விக்கி என்ன செய்கிறார் பாருங்க: வைரல் புகைப்படங்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது தாய்லாந்து நாட்டில் தேனிலவில் இருக்கும் நிலையில் அவர் போட்டோ எடுக்கும்போது விக்னேஷ் சிவன் செய்த செயல் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிவிட்ட உதயநிதி ஸ்டாலின்: வைரல் புகைப்படங்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கேக் ஊட்டி விட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இளையராஜா இசையில் பாடிய பாடகிக்கு இன்று மறுமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

இசைஞானி இளையராஜா உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பாடகிக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. 

ரோப் கயிற்றில் தொங்கும் த்ரில் அனுபவம்: சூர்யா-ஜோதிகாவின் சுற்றுலா வீடியோ

சூர்யா தனது குடும்பத்துடன் தற்போது கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.