close
Choose your channels

கமல்ஹாசன் மகளுக்கு பூங்கொத்து கொடுத்த பார்த்திபன்.. அடுத்த பட நாயகியா?

Saturday, November 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் மகளுக்கு பூங்கொத்து கொடுத்த புகைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்துக்கு பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் ’இரவின் நிழல்’ படத்தை அடுத்து தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுக்கு பூங்கொத்து கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, ‘சகலகலா வல்லிக்கு எதற்கு பூங்கொத்து? யூகித்து சொல்லுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு பலர் உங்கள் அடுத்த பட நாயகியா? உங்கள் அடுத்த பட இசையமைப்பாளரா? உங்கள் அடுத்த படத்தில் ஒரு பாடல் ஸ்ருதிஹாசன் பாடுகிறாரா? என பல்வேறு கமெண்ட்ஸ் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

பார்த்திபனின் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் என்ன பணி செய்யப் போகிறார் என்பதை அவரே அறிவித்தால் தான் இந்த புதிருக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment