'96' படக்குழுவுக்கு பார்த்திபன் கொடுத்த '96' பரிசு

  • IndiaGlitz, [Tuesday,February 05 2019]

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கொஞ்சம் வித்தியாசமாகவும் கவிதைத்தனமாகவும் சிந்திக்க கூடியவர். எந்த சினிமா விழாவாக இருந்தாலும் அவருடைய பேச்சில் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற '96' படத்தின் 100வது நாள் விழாவில் பார்த்திபன் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக விஜய்சேதுபதியையும் த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்து இந்த படத்தின் வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சி ஒன்றில் நடிக்க வைத்தார்

இந்த நிலையில் '96' படக்குழுவினர்களுக்கு ஒரு வித்தியாசமான பரிசையும் அவர் வழங்கியுள்ளார். '96' படத்தை குறிக்கும் வகையில் 9 மற்றும் 6 எண்களை மட்டுமே கொண்ட ஒரு கடிகாரத்தில் 'காதலுடன் உங்கள் பார்த்திபன்' என்று எழுதி படக்குழுவினர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த பரிசு படக்குழுவினர்களுக்கு ஒரு மறக்க முடியாததாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த பரிசு குறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இயற்கையாக சினிமாவை காதலிப்பவன் என்பதால்.... 'ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும்' என்பதால் என் செலவில் ஒரு கேடயம் வழங்கினேன்-96' என்று கூறியுள்ளார்.

More News

அருண்விஜய்யின் 'தடம்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

அருண்விஜய் நடித்து முடித்துள்ள 'தடம்' திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

'பேரன்பு' படத்தை தியேட்டரில் போய் பார்க்க ஆளில்லை, ஏன்? வசந்தபாலன்

தமிழ் சினிமாவின் சிம்மசொப்பனாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் உரிமையாளர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால்

விஜய்சேதுபதி பட டைட்டிலில் இடம்பிடித்த 'துக்ளக்'

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சீனுராமசாமியின் 'மாமனிதன்' படத்தில் நடித்துமுடித்துவிட்டு தற்போது 'ஸ்கெட்ச்' பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்

96 படத்தின் புதிய கிளைமாக்ஸை கூறிய பார்த்திபன்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்றதால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் 100வது நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

மீண்டும் ஒரு ஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்த கொடுமை!

கவுசல்யாவின் கணவர் உடுமலை சங்கர், அம்ருதாவின் கணவர் பிரணாய் என இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அவ்வப்போது ஆணவக்கொலை