பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமண தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

இயக்குனர், நடிகர் பார்த்திபனின் மகளும், மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவருமான கீர்த்தனாவின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடிகர் பார்த்திபன், கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களை நேரில் சந்தித்து வந்தார். இவர் எதற்காக திடீரென பிரபலங்களை சந்தித்து வருகிறார் என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் 8ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இந்த திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கவே பார்த்திபன் திரையுலக பிரபலங்களை சந்தித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்திற்கு பின்னர் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தபோது அதனை தவிர்த்துவிட்டு தற்போது கீர்த்தனா, மணிரத்னம் அவர்களிடன் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது