'ஆஸ்கார்' விருது வாங்க செலவு செய்யணுமா? நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்!
- IndiaGlitz, [Friday,January 29 2021]
திரைத் துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வாங்க செலவு செய்யனுமா? என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பார்த்திபன் அளித்துள்ள பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இன்று ஆஸ்கர் விருதை பெற தகுதி பெற்ற திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது என்பதும் இதில் 93 திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ஒரே திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’ என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றை நேற்று நெட்டிசன் எழுப்பியபோது இந்த லிஸ்டில் உங்களுடைய படமும் இருக்க வாழ்த்துக்கள் என்று ‘ஒத்த செருப்பு’ படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு தெரிவித்துள்ளார். அதற்கு பார்த்திபன் ’இருந்தால் மகிழ்ச்சிஇல்லையேல் அடுத்ததில் முயல்வேன். உள்ளூரிலேயே இவ்வளவு ... அது வெளிநாடுஆயிரம் இருக்கும், அதற்கு செலவு செய்யவும் என்னால் இயலவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்
இந்த பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் ’ஆஸ்கார் விருது வாங்க செலவு செய்யனுமா? புரியல சார் என்ன சொல்ல வரீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்த கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், ‘விசாரித்து பாருங்கள் விசாரணை படத்துக்கு மூன்றரை கோடி செலவு செய்தார்கள், அப்படி செலவு செய்தால்தான் நாமினேஷன் ஆவது கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்
உண்மையில் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெறவும், அந்த விருதுக்காக தேர்வு செய்யப்படும் படத்தின் காட்சிகளை ஜட்ஜ்களுக்கு விளக்கவும் பல கோடி செலவாகும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த திரைப்படம் ஒன்று மலையாளத்தில் வெளிவந்து உள்ளதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றார்கள்.
சிவாஜி கணேசனின் ‘தெய்வ மகன்’, கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ உள்பட பல திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்காமல் போனதற்கு காரணம் அந்த படத்தின் பல காட்சிகளை ஜட்ஜ்களுக்கு புரிய வைக்க முடியாமல் போனது தான் என்றும் கூறப்படுகிறது
விசாரிச்சு பாருங்க ,
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 12, 2020
விசாரனைக்கே 3 1/2 கோடி செலவு செஞ்சாங்க. அப்படி Campaign பண்ணாதான் Nomination ஆவது கிடைக்கும் https://t.co/SmG4lgn6bI