என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்.. 'டீன்ஸ்' படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்த பார்த்திபன்..!

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

நடிகர் பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முற்றிலும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்த ‘டீன்ஸ்’ என்ற த்ரில் சஸ்பென்ஸ் படத்தை பார்த்திபன் இயக்கி உள்ள நிலையில் இந்த படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் விளம்பர பணியில் பார்த்திபன் பிஸியாக இருக்கும் நிலையில் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.

என் படத்திற்கு நானே வரிவிலக்கு அளிக்கிறேன் என்று கூறியுள்ள பார்த்திபன், எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, ஆனால் ‘டீன்ஸ்’ படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 100 மட்டுமே என்றும் கூறியுள்ளார். மேலும் இதில் தனக்கு நட்டம் இல்லை என்றும், வசதி குறைவானவர்களும் படத்தை காண வசதியாக இருப்பதன் நாட்டமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளியான சில தினங்களுக்கு அந்த படத்தை காண கட்டணம் வெறும் 100 ரூபாய் என்பதால் இந்த படத்திற்கு அதிக ரசிகர்கள் வருகை தர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திருவண்ணாமலை ரகசியங்கள் - சிவ வடிவேலன் | ஆன்மிகக்ளிட்ஸ்

திருவண்ணாமலையின் மகிமை, அண்ணாமலையார் சிறப்பு, கார்த்திகை தீபத்தின் அற்புதம் ஆகியவை பற்றி ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு சிவனடியார் சிவ வடிவேலன் அவர்கள் விரிவாகப் பேசியுள்ளார்.

பான் இந்திய திரைப்படமாகும் 'கூலி'.. ரஜினியுடன் இணைகிறாரா பிரபல பாலிவுட் நடிகர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்கள்

பிரபல நடிகை ஓவர் போதையால் தள்ளாடினாரா? டிராமாவா? .. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

பிரபல நடிகை ஒருவர் குடித்துவிட்டு தள்ளாடியபடி காரில் ஏறுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து ரசிகர்கள் பதிவு செய்து வரும் கமெண்ட்ஸ் பரபரப்பை படித்து உள்ளது.

800 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது.. சரத்குமாரின் பரபரப்பு பேச்சு..!

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் சரத்குமார் பேசியபோது 800 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றல்ல.. இரண்டு போஸ்டர்.. 'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா.. எப்போது?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஞாயிறு அன்று வெளியான நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன்