என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்.. 'டீன்ஸ்' படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்த பார்த்திபன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முற்றிலும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்த ‘டீன்ஸ்’ என்ற த்ரில் சஸ்பென்ஸ் படத்தை பார்த்திபன் இயக்கி உள்ள நிலையில் இந்த படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் விளம்பர பணியில் பார்த்திபன் பிஸியாக இருக்கும் நிலையில் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்திற்கு டிக்கெட் விலையை குறைத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.
என் படத்திற்கு நானே வரிவிலக்கு அளிக்கிறேன் என்று கூறியுள்ள பார்த்திபன், எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, ஆனால் ‘டீன்ஸ்’ படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 100 மட்டுமே என்றும் கூறியுள்ளார். மேலும் இதில் தனக்கு நட்டம் இல்லை என்றும், வசதி குறைவானவர்களும் படத்தை காண வசதியாக இருப்பதன் நாட்டமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளியான சில தினங்களுக்கு அந்த படத்தை காண கட்டணம் வெறும் 100 ரூபாய் என்பதால் இந்த படத்திற்கு அதிக ரசிகர்கள் வருகை தர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன் | TEENZ from July 12th in Cinemas Worldwide@immancomposer @dopgavemic @k33rthana@GenauRanjith@lramachandran@AdithyarkM
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 8, 2024
@Iam_Nithyashree@shreyaghoshal@Arivubeing@iYogiBabu@onlynikil@j_prabaahar@shrutihaasan@CVelnambi… pic.twitter.com/aoyFJtDVDF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com