ஏ.ஆர்.ரஹ்மான் முன் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
மைக் வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த இயக்குனர் பார்த்திபன் ஏஆர் ரகுமான் முன்பே மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
பார்த்திபன் இயக்கி நடித்த ’இரவின் நிழல்’ என்ற ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் போது ஏஆர் ரஹ்மானுடன் பார்த்திபன் உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது மைக் வேலை செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், மைக்கை தூக்கி எறிந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ஏஆர் ரகுமான் தர்மசங்கடத்தில் இருந்ததாக தெரிகிறது. அதன்பிறகு மாற்று மைக் ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவர் தொடர்ந்து ஏஆர் ரகுமானுடன் உரையாடினார் .
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பார்த்திபன் இந்த நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துக் கொண்டார்.
மைக்கை தூக்கி அடித்த பார்த்திபன்... அதிர்ச்சியான இசைப்புயல்... இரவின் நிழல் புயலானால் எப்படி.? #Parthiban | #IravinNizhal | #ARRahman pic.twitter.com/EpDxPvCiql
— Polimer News (@polimernews) May 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout