இனிமேல் பார்த்திபனை நடிக்க வைக்க கால்ஷீட் தேவையில்லை: வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகரையோ அல்லது நடிகையையோ நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்படும் என்பதும் அதன் பிறகு தான் கால்ஷீட் வழங்கப்படும் என்பதும் தெரிந்ததே. ஆனால் பார்த்திபனின் ஏஐ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அச்சு வாசல் அவரைப் போல அந்த வீடியோவில் உள்ள பார்த்திபனின் உருவம் பேசுகிறது.
இதை பார்த்தவுடன் நெட்டிசன்கள் ’இனிமேல் பார்த்திபரை நடிக்க வைக்க வேண்டும் என்றால் அவரது கால்ஷீட் தேவையில்லை, ஏஐ டெக்னாலஜி போதும் என்று பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவரது உருவத்தை போன்று இருக்கும் ஏஐ பார்த்திபன் பேசியதாவது: ‘ திரு கேயார் அவர்கள் என் மீதும், என் சினிமா மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது சமீபத்திய படமான ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்திற்கு புதிய யுக்தியை பயன்படுத்தி இருக்கிறார்.
ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல் நாளில் பெருவாரியான ரசிகர்கள் இந்த படத்தை காண வேண்டும் என்பதால் அவர் இப்படி ஒரு ஐடியாவை புகுத்தி உள்ளார். இந்த விளம்பரத்தை பார்க்கும்போது எனக்கு ’சரிகமபதநி’ படத்திற்காக நான் ஒட்டிய ஐம்பதாவது நாள் போஸ்டரில் ’அப்பாடா’ என்று எழுதியதும், அதன்பின் கே பாலச்சந்தர் என்னை பாராட்டி 7 பக்கங்களில் கடிதம் எழுதியதும் ஞாபகம் வந்தது.
சின்ன பட்ஜெட் படங்களை மக்களை சென்றடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும், ஒரு படத்தை மக்களிடம் கொண்டு செல்ல எப்படி எல்லாம் பாடுபட வேண்டும் என்ற வலி அந்த அறிவிப்பில் உள்ளது என்ற வருத்தம் இருந்தாலும், இதுபோன்ற யுக்தி மூலம் மக்களை நல்ல படங்கள் சென்றடைய ஒரு காரணமாக இருக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளது.
ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட பார்த்திபனின் கூறும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Good evening friends pic.twitter.com/9wbeuCmBsk
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com