மீண்டும் வில்லனாகிறாரா பார்த்திபன்? மாஸ் நடிகர் படத்தில் ஒப்பந்தம் என தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி, அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் தற்போது வில்லனாக நடித்து வருகின்றனர் என்பதும் அவர்கள் வில்லனாக நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ’நானும் ரவுடிதான்' உள்பட ஒரு சில படங்களில் ஏற்கனவே வில்லனாக நடித்த நடிகர் பார்த்திபன் தற்போது மாஸ் நடிகர் ஒருவரின் படத்தின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த மாஸ் நடிகர் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.
நடிகர் பவன் கல்யாண் தற்போது ’ஓஜி’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக ஹரிஷ் - சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’உஸ்தாத் பகத்சிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். நடிகை ஸ்ரீ லீலா இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்த நிலையில் இந்த படத்தில் தான் பவன் கல்யாண்-க்கு வில்லனாக பார்த்திபன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout