மகாபாரத்திலேயே பீப் சவுண்ட் உள்ளது. பார்த்திபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவின் பீப் பாடல் தமிழகம் முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் பார்த்திபனின் பீப் பாடல் ஒன்று வெளியாகியது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த பாடல் குறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
பீப் சவுண்ட் மகாபாரதத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை திரு.சிவகுமார் சொற்பொழிவில் கண்டுகொண்டேன். அஸ்வதாம யானை கொன்றுவிட்டேன் என்று சொல்ல செய்து 'யானை' என்ற வார்த்தையின் மீது பகவான் கிருஷ்ணன் பீப் (சங்கு) ஊதி அந்த வார்த்தையை அமுக்கி அப்போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு உத்தியாக பயன்படுத்தி இருக்கிறார். அப்படி இப்பாரதத்தில் இந்த சாதா/ராதாகிருஷ்ணன் வெள்ள சேதத்தையும் 2015ல் உள்ள "உள்ள" சேதத்தையும் ஒரு முடிவுக்கும் அடுத்து பிறக்கும் விடிவுக்கும் வெளிச்சம் பாய்ச்ச எந்த வார்த்தையின் மீதும் பீப் சவுண்ட் போடாமல்
பீப் பீப் பீப்பி ஊதுடா,
Hap hap happy tune-னிலே,
தூக் தூக் தூக்கி போடுடா,
உன் சோகத்தை dust binனிலே
என அனுபல்லவி எழுத து'வங்கி yeah தன் வங்கி கணக்கிலிருந்து சில லட்சங்களை களவாடி அதில் பல்லவி பாடியிருக்கிறார் இப்படி....
துக்கம் என்பது shit-டுதான்,
துடைக்க tissue போதுண்டா- don't
make it big issue டா
டா டா டடாடா-இந்த
டான்சே tasmac போதைடா
போதைடா ஆடுடா நீ ஆடுடா'
போதையில ஆடாதே-மகிழ்வோட
ஆட்றதே real போதை
என்ற tasmac-க்கு எதிராக பொங்கும் பெண்பால் பால் உள்ள அன்பாலும், சலிப்பை துப்ப அடிக்கடி shit என பீத்திக்கொள்ளும் youth சமூகத்தை லாவகமாக வளைத்து போட்டு அதற்கு எப்படி tissue போதுமோ அவ்வளவு தான் துக்கமும் என்று அந்த issue துடைத்து எறியப்பட்டிருக்கிறது.,
எதையும் நாம் இழக்கவில்லை. எல்லோருமே இன்று லாபத்தில்தான். வந்த நாளில் அம்மணம், வாழும்போதே கோமணம், கணக்கு பாத்தா லாபம்தான்' என தத்(துவ)தாட்டமும் குத்தாட்டமும் நிரைந்த கொண்டாட்டமாய் சத்யா இசையில் நான் இயற்றி sorry எழுதி 'BEEP 2016' என்ற ஈர்ப்பு திசையில் 'த்துதா மகித லகுதா' என்ற பாடலை நான் என் சொந்தமாக துவங்கியுள்ள me&youtube channel மூலம் நண்பர்களின் பார்வைக்குள் பதிவிடுகிறேன். நன்றி
இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments