பரிதாபங்கள் கோபி சுதாகர் பிரச்சனை: உண்மையில் என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

’பரிதாபங்கள்’ யூடியூப் சேனலின் கோபி, சுதாகர் சப்ஸ்கிரைபர்களிடம் ஸ்கேம் செய்து விட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து கோபி, சுதாகர் ஆகிய இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.

கோபி மற்றும் சுதாகரன் ஆகிய இருவரும் செயலி ஒன்றின் மூலம் பணம் வசூலித்து திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டு அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டனர். இந்த படத்திற்கு ’ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு பிரமாண்டமான தொடக்க விழாவும் நடத்தப்படட்து. ஆனால் இந்த படம் குறித்து அதன்பின்னர் எந்த தகவலும் வெளிவரவில்லை, இதனால் இந்த திரைப்படத்தை உருவாக்க பணம் வசூல் செய்யப்பட்ட குறிப்பிட்ட ஒரு செயலியின் மோசடிக்கு கோபி மற்றும் சுதாரும் உடந்தையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. இதுகுறித்து கோபி, சுதாகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியபோது, ‘சூப்பர் பெக்கர் என்ற செயலி எங்களிடம் புரமோஷனுக்கு வந்தார்கள் என்றும் மற்ற புரமோஷன் செய்வது போலவே அவர்களுக்கும் நாங்கள் புரமோஷன் செய்தோம் என்றும், மற்றபடி அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்

மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாகத்தான் நாங்கள் தயாரிக்கும் படம் தாமதமாவதாகவும் விரைவில் இந்த படத்தை தொடங்குவோம் என்றும் டீசரும் வெளியிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாமதத்திற்கும், குறிப்பிட்ட செயலியின் மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் பரிதாபங்கள் சேனலில் இயக்குனராக வேலை பார்த்த பாலு போஸ் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் ’நான் இயக்கிய அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுவிட்டன. எனவே வீடியோக்கள் எங்கே எனக் கேட்டு தயவுசெய்து என்னை யாரும் வெறியேத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இவர் பரிதாபங்கள் சேனலில் அந்த குறிப்பிட்ட செயலியின் மோசடி குறித்து பல வீடியோக்களை இயக்கியிருந்தார். இந்த வீடியோக்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதால் தான் ‘பரிதாபங்கள்’ கோபி, சுதாகர் மீது சந்தேகம் வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.