கீழடியில் 21 அடுக்குக் கொண்ட உறை கிணறு... வெட்ட வெளிச்சமான தமிழர் நாகரிகம்!!!

  • IndiaGlitz, [Friday,September 25 2020]

 

சிவகங்ககை மாவட்டத்தின் திருப்புவனம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நாகரிகத்தின் காலகட்டம் 2,200 ஆண்டு பழமையானது எனக் கூறப்பட்ட நிலையில் தமிழரின் நாகரிகத்தை கி.மு.6 நூற்றாண்டிற்கு பின்னோக்கிப் பார்க்கும் வகையில் பல்வேறு பொருட்கள் கீழடியில் கிடைத்தன. அந்தப் பொருட்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃப்ளோரிடா மாகாணத்தின் பீட்டா அனலடிக்கல் லேப் கீழடி நாகரிகம் கி.மு.6 ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது எனச் சான்றளித்தது.

அந்தவகையில் மத்தியத் தொல்பொருள் ஆய்வுக் கழகம் கீழடியில் ஆய்வை நிறுத்திய போதும் மாநில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கிழடியில் 6 ஆம் கட்ட சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புவனத்தின் அகரம், கொந்தகை, மணலூர், கீழடி போன்ற பகுதிகளில் தற்போது 6 ஆம் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது. அந்த ஆய்வில் கடந்த 22 ஆம் தேதி அகரம் பகுதியில் 17 அடுக்குக் கொண்ட உறை கிணறு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதாகத் தகவல் வெளியானது.

தற்போது அப்பகுதியில் மீண்டும் மேற்கொண்ட ஆய்வில் மேலும் அதே கிணற்றில் 4 அடுக்குகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அகரம் பகுதியில் 21 அடுக்குகளைக் கொண்ட உறைக் கிணற்றுப் பகுதி முழுவதுமாக வெளியே காட்சி அளிப்பதாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தக் கிணற்றின் காலம் மற்றும் அதைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாக வில்லை. ஆனால் கிணற்றின் ஒவ்வொரு உறை பகுதியும் முக்கால் அடி உயரம் மற்றும் 2 அரை அடி அகலம் கொண்டதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கீழடி நாகரிக மக்கள் அந்தக் காலக்கட்டங்களில் நீரைச் சேமித்து வைப்பதற்கு இந்த முறையைப் பயன்படுத்தி இருக்கலாம். மேலும் விவசாயப் பணிகளில் முன்னேற்றம் கொண்ட தமிழரின் நாகரிகம் இதில் வெளிப்பட்டு உள்ளது என்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியிருக்கின்றனர்.

More News

என்ன ஒரு அருமையான போட்டோஷாப்? கண்டனம் தெரிவித்த மறைந்த நடிகரின் மனைவி!

ஆக்சன் கிங் அர்ஜூன் சகோதரர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென மரணம் அடைந்தது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம்

எஸ்பிபி கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு விரைந்த பாரதிராஜா

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்

எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனை முன் போலீசார் குவிப்பு: என்ன ஆச்சு?

பாடகர் எஸ்பிபி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்று முன் அந்த மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - டெல்லி மீண்டு வந்து மிரட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

எஸ்.பி.பியை காப்பாற்றுவது கடினம்: மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்