'பரியேறும் பெருமாள்' பட நடிகரின் பரிதாப நிலை: திரையுலகம் உதவுமா?

  • IndiaGlitz, [Monday,February 08 2021]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த திரைப்படம் பல விருதுகளை அள்ளி குவித்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷின் ’கர்ணன்’ என்ற படத்தை இயக்கி முடித்து விட்டு அடுத்ததாக துருவ்விக்ரம் படத்தை இயக்க உள்ளார். இயக்குனர் மாரிசெல்வராஜ் அடுத்தடுத்த படங்களில் பிசியாகி திரையுலகில் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அவருடைய முதல் படமான ’பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த தங்கராசு என்ற நாட்டுப்புற கலைஞரும் நடிகருமான தங்கராசு தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளார்.

’பரியேறும் பெருமாள்’ படத்தில் நாயகன் கதிர் தந்தையாக நடித்து இருந்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு. இவர் தற்போது நெல்லையில் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அவருடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. ஏழ்மையில் இருக்கும் அவர் கூழ் மட்டுமே உணவாகக் கொண்டு வரும் நிலையில் அவருடைய வீட்டை சீரமைத்து தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்வந்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்தநிலையில் ஏழ்மையில் இருக்கும் ’பரியேறும் பெருமாள் பட நடிகர் தங்கராசுவுக்கு மாரி செல்வராஜ் உள்பட திரையுலகினர் உதவுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

இப்போதைக்கு எனக்கு பிடிச்சதெல்லாம்… நடிகை அனுஷ்கா சர்மாவின் வைரல் டிவிட்!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் வாரிசு வந்து விட்டது.

ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் பிரபல நடிகை கைது!

மும்பை பகுதியில் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஆபாச வீடியோ எடுத்து அதை இணையத்திலும் செல்போன்களிலும் பரப்பிய குற்றத்திற்காக நடிகை கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டு உள்ளார்.

 1 வயது குழந்தையை படுகொலை செய்த தாய்- ரயில் முன்பாய்ந்து தற்கொலை!

மும்பை பகுதியில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய ஒரு வயது குழந்தையின் தலையை துண்டித்து படுகொலை செய்ததோடு தானும் ரயில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

சூர்யாவின் அடுத்த படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள்!

சிவாஜி கணேசன், பிரபு, விக்ரம் பிரபு என மூன்று தலைமுறை நடிகர்கள் தமிழ் திரையுலகில் அரிது இல்லை என்றாலும் மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது அரிதான

இரவு 11 மணி வரை படப்பிடிப்பு: முடிவுக்கு வருகிறதா 'பொன்னியின் செல்வன்?

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி வரை நடைபெற்று