'பரியேறும் பெருமாள்' நடிகர், நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Friday,February 03 2023]

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தில் நாயகன் கதிருக்கு தந்தையாக நடித்த நாட்டுப்புறக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து ’பரியேறும் பெருமா’ள் பட குழுவினர் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்தில் நாயகன் கதிருக்கு தந்தையாக நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார் என்பதும் அவரது நடிப்பு மிக இயல்பாகவும் மனதை கவரும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெருக்கூத்துகளில் பெண் வேடம் போட்டு நடித்த அவர் இந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார் என்பதும் குறிப்பாக ஒரு க்ச்ச்ட்சியில் நிர்வாணமாக நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நெல்லை தங்கராஜ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை தங்கராஜ் அவர்களுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் புதிய வீடு கட்டித்தந்தது என்பதும் இந்த வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் தங்கராஜுக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

கமல்ஹாசனுக்கு நெருக்கமான இயக்குனர் காலமானார். திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரும் தமிழ் தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் இயக்குனருமான கே விஸ்வநாத் காலமானார். இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

'நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம்.. 'தளபதி 67' டைட்டில்!

தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் தகவல்கள் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாமல் வெளிவந்து விஜய் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம். 

திருமணமாகி விவாகரத்தானவரை கைப்பிடித்தது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகாவின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் நடந்த நிலையில் அவரை திருமணம் செய்த சோஹைல் கதுரியா ஏற்கனவே அவரது தோழியை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்பது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியானது. 

'தளபதி 67' படத்தின் பிசினஸ் தகவல்களை வெளியிட்ட படக்குழு.. இத்தனை கோடி வியாபாரமா?

 விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்தன என்பதும் இந்த தகவல்கள்

புத்தம் புது கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. இம்முறை வாங்கியது கோமாளி..!

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாகிவிட்டால் சொந்த கார், வீடு வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடும் நட்சத்திரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் 'குக் வித் கோமாளி' என்ற