'பாரீஸ் பாரீஸ்' நான்கு மொழி ரீமேக் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

  • IndiaGlitz, [Friday,October 19 2018]

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த தேசிய விருது பெற்ற திரைப்படமான 'குவீன்' தென்னிந்தியாவில் உள்ள நான்கு மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ரீமேக் ஆகி வருவது தெரிந்ததே. இந்த படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் இந்த நான்கு ரீமேக் படங்களில் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில் காஜல் அகர்வால் நடிக்கும் 'பாரீஸ் பாரீஸ்', தெலுங்கில் தமன்னா நடிக்கும் 'தட் இஸ் மகாலட்சுமி, மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கும் 'ஜாம் ஜாம்' மற்றும் கன்னடத்தில் பாரூல் யாதவ் நடிக்கும் 'பட்டர்பிளை' ஆகிய நான்கு டைட்டில்களில் இந்த படங்களின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் சற்றுமுன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்த படங்களில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். மலையாளத்தில் நீலகண்டனும், தெலுங்கில் பிரசாந்த் வர்மாவும் இயக்கி வருகின்றனர். இந்த நான்கு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.