பற்றி எரியும் பாரீஸ்: போர்க்களமான பெட்ரோல் விலை உயர்வு போராட்டம்
- IndiaGlitz, [Sunday,November 25 2018]
இந்தியாவில் சமீபத்தில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோது சமூக வலைத்தளங்களில் மட்டுமே தங்கள் அதிருப்தியை பொதுமக்கள் தெரிவித்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தால் அந்நாட்டின் தலைநகர் பாரீஸ் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாரீசில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் இருந்த பொருட்கள், வாகனங்களை கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
போலீசார்களை போராட்டக்காரர்களும் திருப்பி தாக்கியதால் நேற்று பாரீஸ் நகரமே போர்க்களம் போல் காணப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தவறிய அதிபர் எம்மானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.