ரஜினி-அஜித்: பாரீஸ் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் யார் படம்?

  • IndiaGlitz, [Sunday,January 06 2019]

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்கள் ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய திரையரங்கமான கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. ரஜினியின் கபாலி', காலா', 2.0', விஜய்யின் 'மெர்சல்', 'சர்கார்' உள்பட ஒருசில படங்கள் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி பாரீஸ் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் தலைவர் ரஜினியின் 'பேட்ட', தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்களில் எந்த படம் திரையிடப்படும் என்ற கேள்வி ரஜினி, அஜித் ரசிகர்களிடையே இருந்தது.

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் இந்த திரையரங்கில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதன் முன்பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்பட உலகில் உள்ள பெரும்பாலான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இரண்டு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரப்படும் நிலையில் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கமும் இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.