நான் அதை செய்வதில்லை.. அதனால் எனக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை: மனம் திறந்த ப்ரீனிதி சோப்ரா..!

  • IndiaGlitz, [Sunday,April 21 2024]

நடிகை ப்ரீனிதி சோப்ரா கடந்த 13 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் இருக்கும் நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே அவர் நடித்து இருக்கும் நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு என்ன காரணம் என்பதை குறித்து மனம் திறந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து நடித்து கொண்டிருக்கும் ப்ரீனிதி சோப்ரா பல சூப்பர் ஹிட் படங்களை பாலிவுட் கொடுத்தவர் என்றாலும் அவரது திறமைக்கு ஏற்ப அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’திரையுலகில் பேவரைட்டிசம் இருப்பதால்தான் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது, பேவரைட்டிசம் இருக்க வேண்டும், வாய்ப்புக்காக சிலருடன் நட்பு வைத்துக் கொள்வது உள்ளிட்ட சில விஷயங்களை செய்தால் தான் இங்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது.

ஆனால் நான் அப்படி செய்வதில்லை, வாய்ப்புக்காக எந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடமும் நான் பழகுவதில்லை, அதனால்தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, இருப்பினும் என் திறமையை மதித்து வாய்ப்பு அளிப்பவர்களின் படங்களில் மட்டும் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.