திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தில் இரண்டு வயது குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரிட்டன் நாட்டில் ஒரு தம்பதியர் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது 2 வயது குழந்தை பரிதாபமாக மரணம் அடைந்ததை கவனிக்காமல் அவர்கள் ஆர்வத்துடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த டேனியல், எம்மா ஆகிய தம்பதிகளுக்கு நெள மற்றும் ஆஸ்டின் ஹார்மன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். வார இறுதி நாட்களை கொண்டாட இரண்டு குழந்தைகளுடன் டேனியல் தம்பதியர் திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர்.
திரைப்படத்தை மும்முரமாக அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆஸ்டின் சகோதரர் நெள என்ற 4 வயது குழந்தை சாப்பிடுவதற்கு ஒரு திண்பண்டத்தை தனது சகோதரர் ஆஸ்டினுக்கு கொடுத்திருக்கிறான். அந்த தின்பண்டத்தை வாங்கி சாப்பிட்ட 2 வயது ஆஸ்டினுக்கு, அந்த தின்பண்டம் திடீரென தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சுவிட சிரமப்பட்டு இருக்கின்றான். இதனை ஆஸ்டின் பெற்றோர் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தில் கவனிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென ஆஸ்டின் மயக்கம் அடைந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக ஆஸ்டினை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தை இறந்து சில நிமிடங்கள் ஆகி விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தில் குழந்தை மரணத்தில் துடிப்பதை கூட கவனிக்காமல் இருந்த பெற்றோர்களுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments