ரிஜிஸ்தர் திருமணம் செய்யும் காதலர்களுக்கு திடீர் சிக்கல்:
- IndiaGlitz, [Wednesday,March 14 2018]
பெற்றோர்களுக்கு தெரியாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்யும் காதலர்களுக்கு கிடுக்கிப்பிடியாக இனிமேல் ரிஜிஸ்தர் திருமணம் செய்து கொள்பவர்கள் பெற்றோர் அனுமதியை பெற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அரசு ரகசியமாக அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதற்கு முன்னர் 21 வயது நிரம்பிய ஆணும், 18 வயது நிரம்பிய பெண்ணும் யாருடைய அனுமதியும் தேவையில்லாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இனிமேல் ரிஜிஸ்தர் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களுடைய பெற்றோர்களின் ஒரிஜினல் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்றும் பெற்றோர்கள் இல்லாதவர்கள் அவர்களின் இறப்பு சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரிஜினல் அடையாள அட்டையில் சந்தேகம் இருந்தால் அதிகாரிகள் பெற்றோர்களை விசாரிக்க வேண்டிய நிலை வரும் என்பதால் இனிமேல் பெற்றோர்களுக்கு தெரியாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்வது காதலர்களுக்கு சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பை தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் ரகசிய சுற்றறிக்கையாக விடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நடவடிக்கை ஜாதி மறுப்பு திருமணத்திற்கு, சமூக நீதிக்கு எதிரானது என்று ஒருசிலர் கூறி வந்தாலும் பெற்றோருக்கு தெரியாமல் நடைபெறும் திருமணத்தை ஊக்குவிக்ககூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை தேவைதான் என்று இன்னொரு பிரிவினர் கூறி வருகின்றனர். இந்த புதிய விதியால் ஏற்படும் விளைவுகள் போகப்போகத்தான் தெரியும்