பரவை முனியம்மா குறித்து பரவி வதந்தியால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,November 01 2019]

விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. நூற்றுக்கணக்கான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்களை பாடிய இவர் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என இவர் அழைக்கப்படுகிறார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல் விருதுகளை பெற்ற பரவை முனியம்மா வயது முதிர்வு காரணமாகவும், உடல்நலக்கோளாறு காரணமாகவும் படுத்த படுகையாக உள்ளார். இவருக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிகிச்சை பெற்று பரவை முனியம்மா குறித்து ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவர் நலமுடன் உள்ளதாகவும், சிரித்து பேசிக் கொண்டிருப்பதாகவும், அவரது உறவினர்களும், மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பரவை முனியம்மா குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது