நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்

  • IndiaGlitz, [Sunday,March 29 2020]

தமிழ் திரைப்பட நடிகையும் கிராம பாடல்களை பாடும் பாடகியுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83 

கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா, அதன்பின் திரையுலகினரின் நிதி உதவியால் குணமாகி வீடு திரும்பினார். 
இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்ற தகவல் வெளிவந்துள்ளது

விக்ரம் நடித்த தூள் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல’ என்ற பாடலை பாடி தமிழகம் முழுவதும் பிரபலமான பரவை முனியம்மா, அதன் பின்னர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பாடல்களை பாடி மகிழ்வித்து உள்ளார். இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கெளரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

More News

எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்தது இந்திய மக்கள் கோடிக்கணக்கான பேர் வரலாற்றிலேயே முதல்முறையாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி செய்த டாடா

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்திய மக்களை காப்பாற்ற மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு உதவிடும் வகையில் டாடா நிறுவனம் மிகப்பெரிய தொகையாக ரூ.500 கோடி நிதியுதவி

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு: இம்முறை சிக்கிய இராஜபாளையம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போதைய நிலைமையில்

கொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வரும் நிலையில் மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது 

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்ள இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது