டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் .. நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது 'பாராசூட்'  சீரிஸ்..

  • IndiaGlitz, [Tuesday,November 19 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டிரெய்லரை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த சீரிஸ், இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமாகும் என்றும் அறிவித்துள்ளது.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான பாராசூட் சீரிஸ், இரண்டு இளம் சிறார்களின் உலகை பற்றியதாக உருவாகியுள்ளது. குழந்தைகளின் மீது பெரும் அன்பை வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டுமென அவர்கள் மீது கண்டிப்பு காட்டுகிறார்கள். இரு சிறுவர்களும் பெற்றோருக்கு தெரியாமல், பாராசூட் எனும் மொபட் பைக்கை எடுத்துக்கொண்டு பயணம் செல்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் 'பாராசூட்'.

இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ள இந்த சீரிஸில், தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை 'குக்கு வித் கோமாளி' புகழ் கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா குலசேகரன் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதோடு, இந்தத் சீரிஸின் தயாரிப்பையும் கையாண்டுள்ளார்.

இந்த சீரிஸில் நடிகர்கள் காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பாவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஶ்ரீதர் K எழுதியுள்ள 'பாராசூட்' சீரிஸிற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த சீரிஸிற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள். இந்த சீரிஸிற்கு கலை இயக்கம் ரெமியன், ஸ்டண்ட் மற்றும் உடைகளை டேஞ்சர் மணி மற்றும் ஸ்வப்னா ரெட்டி ஆகியோர் செய்துள்ளனர்.

More News

ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் சரியான முறை

பிரபல பக்தி பாடகர் வீரமணி ராஜு அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், ஐயப்பன் பற்றிய பல்வேறு ஆன்மீகக் கருத்துக்கள் மற்றும் பக்தி பாடல்களைப் பகிர்ந்துள்ளார்.

அழகுமுத்து புலவர்: முருகனின் அருளால் மேக ரோகம் நீங்கி, திறப்புகழ் பாடிய கதை

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், புகழ்பெற்ற ஆன்மீக அறிஞர் பி.என். பரசுராமன் அவர்கள், முருகனின் திருவிளையாடல்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

மிஷினில் சிக்கி கொண்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகையின் கை.. மருத்துவமனையில் அனுமதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் முதல் பாகத்தில் நடித்த நடிகையின் கை மெஷினில் சிக்கிக் கொண்டதை அடுத்து அவர் படுகாயம் அடைந்ததாகவும்

பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் அஜித் படம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித்தின் 'விடாமுயற்சி' அல்லது 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் ஒன்று வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது

சிவகார்த்திகேயனின் இமாலய வளர்ச்சி.. முதல் 300 கோடி ரூபாய் வசூல் படம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுவது திரை உலகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.