பாராஒலிம்பிக் தங்க மங்கைக்கு ஆனந்த் மஹேந்திரா வழங்கிய நெகிழ்ச்சி பரிசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர்களுக்கு ஆனந்த் மஹேந்திரா எப்போதும் விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கி அசத்திவருகிறார். அந்த வகையில் இந்தியாவில் முதல்முறையாக பாரா ஒலிம்பிக் பிரிவில் தங்கம் வென்ற பெண்மணிக்கு அவர் பிரத்யேக பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இது பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவனி லெகரா துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர்ரைபிள் எஸ்.எம்.1 பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் தங்கம் இது என்பதால் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்தது. அதேபோல அவனி 10 மீட்டர் ஸ்டாண்டிங் எஸ்.எச்.1 பிரிவில் 249.6 புள்ளிகளைப் பெற்று அசத்தினார். இதுவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற அவனி லெகராவிற்கு கார் பரிசளிப்பதாக ஆனந்த் மஹிந்திரா வாக்களித்து இருந்தார். இதனால் அவனி இயக்கும் வகையில் பிரத்யேகமாக எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் காரை பிரத்யேகமாக உருவாக்கித் தற்போது அவனிக்கு பரிசளித்துள்ளார். இதையடுத்து ஆனந்த் மஹிந்திரா மற்றும் தனக்காகவே பிரத்யேகமாக காரை உருவாக்கிய குழுவிற்கும் அவனி நன்றி தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout