பாரா ஒலிம்பிக் போட்டி: பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை!
- IndiaGlitz, [Saturday,August 28 2021] Sports News
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை இந்தியா வென்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இதில் இந்தியா உள்பட 162 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் மற்றும் சீன வீராங்கனை ஜாங்க் மியா மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பவினா படேல் 3-2 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் பவினா படேல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதும், இறுதிப் போட்டியில் அவர் வெற்றி அடைந்தால் தங்கப்பதக்கமும் தோல்வியடைந்தால் வெள்ளிப்பதக்கமும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#IND Bhavina Patel's dream run continues! ?? One win away from her GOLD medal. India is proud of you ????#Paralympics #Praise4Para
— Doordarshan Sports (@ddsportschannel) August 28, 2021
pic.twitter.com/7LT6eivJQ6