பாரா கிளைடர் விபத்து: தேனிலவு சென்ற சென்னை இளைஞர் பலி!

  • IndiaGlitz, [Tuesday,November 19 2019]

சென்னை இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி தேனிலவு சென்ற இடத்தில், அவர் மனைவி கண் முன்னே பாராகிளைடர் விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குலுமணாலிக்கு தேனிலவு செல்ல முடிவு செய்தனர். புதுமண தம்பதிகள் இருவரும் தேனிலவை சந்தோஷமாக குலுமணாலியில் கொண்டாடிய நிலையில் டோபி என்ற இடத்தில் பாராகிளைடிங்கில் பல சுற்றுலா பயணிகள் பறந்து வருவதைப் பார்த்த அரவிந்துக்கும் ப்ரீத்திக்கும் தாங்களும் அந்த பாராகிளைடில் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது

இதனை அடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி முதலில் ப்ரித்தி பாராகிளைடாரில் பறந்து வந்தார். அதன்பின் அரவிந்த் பாராகிளைடரில் பறந்த நிலையில் பாதுகாப்பு பெல்ட்டை சரியாக மாட்டாததால் திடீரென நிலைகுலைந்த அரவிந்த், உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து மரணமடைந்தார். தன்னுடைய கணவர் தன் கண்முன்னே மரணமடைந்ததை பார்த்த மணப்பெண் பிரீத்தி கடும் அதிர்ச்சி அடைந்தார்

இதுகுறித்து குலுமனாலி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாதுகாப்பு பெல்ட் சரியாக மாட்டாததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ப்ரீத்தி கொடுத்த புகாரின் பெயரில் பாராகிளைடிங் நடத்தும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாராகிளைடரில் பறப்பது சுற்றுலா பயணிகளுக்கு த்ரில்லான அனுபவம் என்றாலும் தகுந்த பாதுகாப்பின்றி பறந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரஜினி-கமலுக்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்

அதிமுக, திமுக என இரண்டு பெரிய கூட்டணியை தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு பெரிய கூட்டணி அமைய வேண்டும் என்றும், ரஜினி, கமல் தனித்தனியாக களம் கண்டால்

கமல்ஹாசனுக்கு கிடைத்த புதிய மரியாதை!

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆனதையடுத்து

கணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு!

வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் வகையில் அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஐதராபாத் அருகே நடந்துள்ளது

ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யா எடுக்கும் அவதாரம்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

ரஜினியின் அதிசயம்-அற்புதம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கமல்ஹாசனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் தமிழக அரசு குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்தார்.