பாரா கிளைடர் விபத்து: தேனிலவு சென்ற சென்னை இளைஞர் பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி தேனிலவு சென்ற இடத்தில், அவர் மனைவி கண் முன்னே பாராகிளைடர் விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னையை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குலுமணாலிக்கு தேனிலவு செல்ல முடிவு செய்தனர். புதுமண தம்பதிகள் இருவரும் தேனிலவை சந்தோஷமாக குலுமணாலியில் கொண்டாடிய நிலையில் டோபி என்ற இடத்தில் பாராகிளைடிங்கில் பல சுற்றுலா பயணிகள் பறந்து வருவதைப் பார்த்த அரவிந்துக்கும் ப்ரீத்திக்கும் தாங்களும் அந்த பாராகிளைடில் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது
இதனை அடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி முதலில் ப்ரித்தி பாராகிளைடாரில் பறந்து வந்தார். அதன்பின் அரவிந்த் பாராகிளைடரில் பறந்த நிலையில் பாதுகாப்பு பெல்ட்டை சரியாக மாட்டாததால் திடீரென நிலைகுலைந்த அரவிந்த், உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து மரணமடைந்தார். தன்னுடைய கணவர் தன் கண்முன்னே மரணமடைந்ததை பார்த்த மணப்பெண் பிரீத்தி கடும் அதிர்ச்சி அடைந்தார்
இதுகுறித்து குலுமனாலி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாதுகாப்பு பெல்ட் சரியாக மாட்டாததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ப்ரீத்தி கொடுத்த புகாரின் பெயரில் பாராகிளைடிங் நடத்தும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாராகிளைடரில் பறப்பது சுற்றுலா பயணிகளுக்கு த்ரில்லான அனுபவம் என்றாலும் தகுந்த பாதுகாப்பின்றி பறந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com