'பைரவா' படத்தில் டான்ஸ் ஆடும் 'பாபநாசம்' நடிகர்

  • IndiaGlitz, [Monday,September 19 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இதுகுறித்த தேதி வெளியாகும் என்பதையும் பார்த்தோம்.
இந்நிலையில் 'பைரவா' படத்தில் விஜய்யுடன் இணைந்து ரோஷன் பஷீர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளாராம். இவர் ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசனின் 'பாபநாசம்' மற்றும் விஜய் ரசிகர்கள் நடித்த '3 ரசிகர்கள்' ஆகிய படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் விரைவில் படமாக்கப்படவுள்ளதாகவும், இந்த பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் அளவுக்கு வித்தியாசமான நடனம் அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது