'பாபநாசம்' பாணியில் பிணத்தை மறைத்து 7 ஆண்டுகள் தப்பித்த நெல்லை குடும்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரு கொலையை செய்துவிட்டு அந்த கொலை கடைசி வரைக்கும் போலீசுக்கு தெரியாமல் தப்பித்தனர் என்பதுதான் கதை என்பது அனைவரும் அறிந்ததெ. இந்த நிலையில் இதே பாணியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் தோட்டத்தில் மின்சாரத்தில் சிக்கி பலியான ஒருவரை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு விட்டு கடந்த 7 ஆண்டுகளாக போலீஸின் பிடியில் சிக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது
நெல்லை மாவட்டம் சிவகிரி என்ற பகுதியில் மன்னார் என்பவரை திடீரென காணவில்லை. வயலுக்கு சென்ற அவர் காணாமல் போனது குறித்து அவரது மனைவி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் மாயமான மன்னாரை கண்டுபிடிக்கும்படி சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தது
சிபிஐ பல்வேறு பாணியில் இந்த கொலை வழக்கை விசாரித்த போதிலும் கொலைக்கான எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஏழு ஆண்டுகள் கழித்து அந்த பகுதியில் ஒரு குடும்பத்தினர் பரிகார பூஜை நடத்தி வருவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. மேலும் பரிகார பூஜை நடத்திய தேதியும் மன்னார் காணாமல் போன தேதியும் ஒரே தேதியாக இருந்ததால் உடனடியாக நெல்லைக்கு வந்த சிபிஐ போலீசார் அந்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்
விசாரணை கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அந்த குடும்பத்தினருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் ஒன்றில் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்திருந்ததாகவும் அந்த வேலியில் தற்செயலாக சிக்கி மன்னார் இறந்து விட்டதாகவும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால், சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பதற்கு தண்டனை கிடைக்கும் என்று பயந்து தங்களுடைய காரும்பு தோட்டத்திலேயே மன்னாரை புதைத்துவிட்டதாகவும்வாக்குமூலம் கொடுத்தனர். இதனையடுத்து சிபிஐ போலீசார் அந்த குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
பாபநாசம் பட பாணியில் ஒரு பிணத்தை மறைத்து 7 ஆண்டுகளாக தப்பித்து வந்த அந்த குடும்பத்தினர் கடைசியில் பரிகார பூஜை செய்ததால் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout