close
Choose your channels

ஹீரோவாக மாறிய கமல் மகளின் வில்லன்

Wednesday, October 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படத்தில் நடித்த அனைவருமே புதுப்புது வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வரும் நிலையில், இந்த படத்தில் நடித்த இன்னொரு நடிகர் தற்போது ஹீரோவாகியுள்ளார்.

பாபநாசம்' படத்தில் கமல் மகளாக நடித்த நிவேதா தாமஸை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து நிவேதா தாமஸையும், கவுதமியையும் மிரட்டும் வருண் பிரபாகர் என்ற கேரக்டரில் நடித்த இளம் நடிகர் ரோஷன் பஷீர் தற்போது தமிழ்ப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'குபேர ராசி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கவுள்ளார்.

ஒரு இளைஞர் தன்னுடைய குடும்பத்தின் பூர்வீக வீடு ஒன்றை தனது நண்பர்களின் உதவியால் அந்த பகுதியின் கவுன்சிலரிடம் இருந்து மீட்டு எடுக்கும் உணர்ச்சி பூர்வமான கதைதான் 'குபேர ராசி' என்று இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பிஜோ என்பவர் வில்லனாக நடிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment