ஹீரோவாக மாறிய கமல் மகளின் வில்லன்

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படத்தில் நடித்த அனைவருமே புதுப்புது வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வரும் நிலையில், இந்த படத்தில் நடித்த இன்னொரு நடிகர் தற்போது ஹீரோவாகியுள்ளார்.

பாபநாசம்' படத்தில் கமல் மகளாக நடித்த நிவேதா தாமஸை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து நிவேதா தாமஸையும், கவுதமியையும் மிரட்டும் வருண் பிரபாகர் என்ற கேரக்டரில் நடித்த இளம் நடிகர் ரோஷன் பஷீர் தற்போது தமிழ்ப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'குபேர ராசி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கவுள்ளார்.

ஒரு இளைஞர் தன்னுடைய குடும்பத்தின் பூர்வீக வீடு ஒன்றை தனது நண்பர்களின் உதவியால் அந்த பகுதியின் கவுன்சிலரிடம் இருந்து மீட்டு எடுக்கும் உணர்ச்சி பூர்வமான கதைதான் 'குபேர ராசி' என்று இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பிஜோ என்பவர் வில்லனாக நடிக்கவுள்ளார்.

More News

18 வருடங்களுக்கு பின்னர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கவுதமி?

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக 'பாபநாசம்' படத்தில் ரீ எண்ட்ரி ஆன நடிகை கவுதமிக்கு ரசிகர்கள் கொடுத்த அமோக ஆதரவு காரணமாக ....

இன்று மாலை 5 மணிக்கு 'வேதாளம்' பற்றிய முக்கிய தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் பாடல் வெளியீடு இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளான...

தானாக முளைத்த காட்டு மரம் விஜய்சேதுபதி. ராம் புகழாரம்

விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள 'மெல்லிசை' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. ...

ரஜினி-விஜய்-அஜீத். தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் யார்?

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக முதல்வர் பதவிக்கு தமிழ் திரையுலகினர்கள் தான் அதிகளவு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்...

மனோரமா இறுதிச்சடங்கில் முதல்வர் பேசவில்லையா? சரத்குமார் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் அணியினர்களும்...