போலீஸில் புகார் அளித்த போலீஸ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ரிலீஸான 'பாபநாசம்' திரைப்படம் 'பாகுபலி'யின் அபார வசூலுக்கு இடையே தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் கச்சிதமான திரைக்கதையே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்து நடிப்பில் சிறப்பான பெயர் பெற்றவர் போலீஸ் வேடத்தில் நடித்த ஆஷா சரத் என்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய நடிப்பை நேரில் பார்த்து அசந்துபோன கமல்ஹாசன், தன்னுடைய அடுத்த படமான 'தூங்காவனம்' படத்தில் அவருக்கு முக்கிய வேடம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆஷா சரத்தின் ஆபாச புகைப்படங்கள் பிரபல சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஆஷா சரத், இந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இதுகுறித்து கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து ஆஷா சரத் கூறியதாவது, "மார்பிங் செய்யப்பட்ட என்னுடைய ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகி அறிந்து அதிர்ச்சி அடைந்த நான், உடனடியாக கொச்சி போலீஸ் கமிஷனரிடம் குறித்து புகார் செய்திருக்கிறேன். அவர்களும் உடனேயே எனது புகாரை பதிவு செய்து, சைபர் கிரைம் போலீஸ் மூலமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments