இங்க கண்டனம் தெரிவிக்கிறது கூட SHARE பண்ணி தான் பண்ணுவானுங்க.
- IndiaGlitz, [Friday,March 15 2024]
ஊடகவியலாளர்,விஜே,மணப்பெண் ஒப்பனை கலைஞர் ,பனிமலர் அங்காடியின் நிறுவனருமான பனிமலர் பன்னிர்செல்வம் அவர்கள் அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
சின்ன குழந்தை , வயசுப் பொண்ணு,வயசான பாட்டி யாராக இருந்தாலுமே அவர்களுக்கு இருப்பது பெண்ணுறுப்பு .இந்த சமூகம் அதை தான் பார்க்கிறது .இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.ஆண்களுக்கு இச்சை தோன்றும் அளவிற்கு பெண்கள் உடை இருக்கு என்று கூறுவார்கள்.ஆனால் சின்ன குழந்தையிடம் என்ன பெரிய இச்சையை கண்டார்கள்.
சமிபத்தில் கூட ஜார்க்கண்ட் மாநில தம்பதிகளில் ,அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.பெண் என்பவள் உடலுறவு கொள்வதற்கான ஒரு போக பொருள் என்பதே தற்போதைய நிலைமை. அவர்களுக்கும் வலி உணர்வு இருக்கு என்பது இங்கு யாருக்கும் புரிவதில்லை.
மேலும் இங்கு தண்டனைகள் என்பதும் வெகு சாதாரணமாக ஆகி விட்டது .எனவே குற்றங்கள் அதிகரித்து பயமும் இல்லாமலே போகி விட்டது. குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச தண்டனை அவர்களை திருத்துவதில்லை .
எனக்கு உண்மையில் இங்கு இருக்கக்கூடிய கட்டமைப்புகள் புரியவில்லை புதுச்சேரி சிறுமி பாலியல் சீண்டல்.இது போன்ற ஆட்களின் ஆணுறுப்பை அறுத்து விட்டோம் என்றாலாவது அவர்கள் பயத்துடனே திரிவார்களா என தோன்றுகிறது.தண்டனைகள் கொடுரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆண்களை போன்று தான் பெண்களுக்கும் அந்தரங்கமான உறுப்புகள் இருக்கிறது .
அவள் பெண் என்பதால் சற்று மாறுபட்டு இருக்கும். இந்த மாதிரியான விழிப்புணர்வுகளை எப்படி கொண்டு சேர்ப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இதை பற்றி பேசவே பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் வரை கூச்சப்படுகிறார்கள்.தமிழ்நாடு எல்லாவற்றிற்கும் முன்னோடியாக உள்ளது.ஆனால் பாலியல் குற்றங்கள் மட்டும் வளர்ந்து கொண்டே போகிறது.இது குறைய அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள்.
முன்னே ஒரு காலகட்டத்தில் குழந்தைகள் பெண்கள் யாராக இருந்தாலும் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களை எல்லாம் அவ்வளவாக வெளியே சொல்லவில்லை.தற்போது அப்படி இல்லை.
எங்கு என்ன நடந்தாலும் பகிரங்கமாக வெளியில் தெரிகிறது.அதுவும் இது போன்ற பாலியல் குற்ற செய்திகளை எல்லாம் கேட்கும்போது மனம் பதறுகிறது.அதே போல் சமூக வலைத்தளங்களிலும் உபயோகமில்லாத தேவையில்லாத வீடியோக்கள் ரொம்ப ஆபாசமாக உள்ளது.
சின்ன குழந்தைகள் கூட, இதை நான் மொபைல் மூலமாக பார்த்து கற்று கொண்டேன் என சொல்லும் அளவிற்கு சமுதாய சூழ்நிலைகள் உள்ளது.குழந்தைகளிடம் எதை எப்போது பேச வேண்டும் என்ற புரிதல் நமக்கே இல்லை என்றபோது குழந்தைகள் என்ன செய்வார்கள்.எனவே தகுந்த உரையாடல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.
சாதாரணமாக பேசப்பட்ட தமிழ் வார்த்தைகள் எல்லாமே இப்போது கெட்ட வார்த்தை ஆகிவிட்டது.ஒரு வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்களை வைத்து பிறகு நாம் சாதாரணமாக கூறும் வார்த்தைகளை கூட கேட்டு கேலியாக சிரிக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது . அப்படியானால் ஒரு மொழியை ஒரு அணுகுமுறையை எல்லாவற்றையும் சீர்குலைவு செய்கிறார்கள்.
நமக்கென்று உள்ள அடிப்படை கலாச்சாரத்தையே அழிக்கிறார்கள்.மேலும் அனிமல் படமெல்லாம் ஒரு படமே இல்லை.அது மொத்தமாக ஒரு ஆபாசம் கேவலம் முகசுழிப்பை ஏற்படுத்தக் கூடிய படம்.
ஒரு தவறான கருத்து ரசிக்கும்படியாக இருந்தால் அதை இரு பாலினத்திற்கும் இடையில், பொதுவாக வைத்து பார்த்தால் நிச்சயமாக அருவருப்பாக இருக்கும் .
ஒருவர் யாருடன் அல்லது எத்தனை பேருடன் இருக்க வேண்டும் என்பது தனிப்பட்ட மனிதரின் தேர்வு .ஆனால் அதை பொதுமை படுத்த வேண்டாம் என்பதே எனது கருத்து , என தன்னுடைய கருத்தை மிகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் விளக்கிய பனிமலர் பன்னிர்செல்வம் அவர்களின் சரமாரியாக கேள்விகளை அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.